நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம் பிப் 17
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் இன்று திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நம் மாவட்டத்திற்கு 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 5ஆவது நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கல் ஊராட்சி பனைமேடு கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 28.94 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக அரசு கட்டடங்களில் வண்ண ஓவியங்கள், நல்வரவு போன்றவைகள் தீட்டபட்டு வருகின்றன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த சிக்கல் ஊராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் இத்திட்டத்தின் மூலம் சுமார் 12 பணிகள் வழங்கப்பட்டு 9 பணிகள் முடிவுற்று நிலையிலும், மூன்று பணிகள் நடைபெற்று வருகின்றன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ 2 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் 12 பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் கொடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் சுமார் சிக்கல், பொரவச்சேரி, மஞ்சக்கொள்ளை, அந்தனப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள 750 விவசாய பெருமக்கள் பயன் பெறுவார்கள். மேலும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் எண்ணிக்கை சுமார் 30 ஆயிரம் முட்டைகள் எனவும், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகாமையில் உள்ள ஊரில் சென்று விற்காமல், இங்கு திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்று விவசாய பெருமக்கள் பயனடையலாம் எனவும். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வரும் விவசாயிகளை அலுவலர்கள் அன்புடன் நடத்த வேண்டும், கடினமாக நடந்து கொள்ளக் கூடாது எனவும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான இன்று நிறைவேற்றப்பட்டது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்த விழாவில் ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி, பாலமுருகன், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக
நாகை மாவட்ட
செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

