குளச்சல்,பிப்,14
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.
கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் ‘ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா’ வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள ‘இண்டியா ஒன்’ ஏ.டி.எம். ஆகும்.
இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.
பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல்
காவல் ஆய்வாளர் கிறிஸ்டி அதிரடியாக களமிறங்கி குளச்சல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும்
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு
காவலாளிகள் நியமிப்பது அவசியம் குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதும் அவசியம் குறித்தும் வருங்காலங்களில் திருவண்ணாமலை சம்பவங்கள் போல் எந்தப் பகுதிகளிலும் இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என்பதாலும் குறிப்பாக
ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்த ஆய்வாளர் கிறிஸ்டி குளச்சல் பகுதியில் உள்ள வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார். தமிழகத்தையே பரபரப்பாகிய இந்த 4 ஏடிஎம் கொள்ளை நிகழ்வின் போது இதில் காவலாளிகள் யாரும் இல்லை என்பதும் இதுவே கொள்ளையர்களுக்கு பெரும் வசதியாக அமைந்துவிட்டது என்பதால் இது போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாத வண்ணம் வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையங்களுக்கும், வங்கிகளுக்கும் காவலாளிகள் நியமிப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி குளச்சல் ஆய்வாளர் கிறிஸ்டி வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு
அவசர விழிப்புணர்வு கூட்டம் நடத்தி அறிவுறுத்தினார்
உடனடியாக இதனை செயல் வடிவத்திற்கு கொண்டுவர பல வங்கி அதிகாரிகள் முன்னந்துள்ளதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டது
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த சில தினங்களில்
குளச்சல் ஆய்வாளர் எடுத்த இந்த அதிரடி அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோல் தமிழக முழுவதும் காவல்துறை அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வங்கி ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டம் நடத்தி குளச்சல் காவல் நிலையம் போல் முன்னுதாரணமாக செயல்பட வேண்டுமென பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். குளச்சல் காவல் நிலைய ஆய்வாளரின் இந்த அதிரடிக்கு
பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்கள் குவிகிறது.
செய்தி தொகுப்பு
எம் ஆத்திமுத்து
போலீஸ் செய்தி நியூஸ்

