• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
February 13, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

 

நாகப்பட்டினம் பிப்ரவரி 13

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 216 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாகப்பட்டினம் வட்டம், டாடா நகரை சேர்ந்த பிரவீன்குமார் த/பெ செல்வநாதன் என்பவர் சவுதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக தமிழ்நாடு அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டு தொகை ரூ.20,877 க்கான காசோலையினை அவரது தந்தை செல்வநாதன் அவர்களிடமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.6,100 வீதம் மொத்தம் ரூ.61,000 மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினையும், கீழ்வேளுர் வட்டம் வடுகச்சேரி கிராமம் நடுத்தெருவை சேர்ந்த அஜீஸ் த/பெ ராஜேந்திரன், மற்றும் செல்லமுத்து த/பெ ராஜேந்திரன் ஆகியோர்களுக்கு தசைசிதைவு நோயினால் மாற்றுத்திறன் பாதிக்கப்பட்வர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.2,000 வீதம் பராமரிப்பு உதவித்தொகைக்கான ஒப்பளிப்பு ஆணையினையும், நாகப்பட்டினம் வட்டம், திட்டச்சேரி கிராமம் வெள்ளத்திடலை சேர்ந்த நடராஜன் த/பெ வீரமுத்து என்ற மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிளையும், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 06 பயனாளிகளுக்கு தலா ரூ.7,200 வீதம் மொத்தம் ரூ.43,200 மதிப்பீட்டில் மோட்டார் வசதியுடன் கூடிய தையல் இயந்திரத்தினையும், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு புதிய அட்டையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

மேலும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 20 பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ- மாணவியர்களுக்கு கலை திருவிழா மற்றும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற 48 மாணவ-மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயத்தினையும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராத்தைச் சேர்ந்த கமலா க/பெ முருகானந்தம் என்பவர் அளித்த மனுவிற்கு உடனடி தீர்வாக இலவச தேய்ப்பு பெட்டியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்

இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post

நாகர்கோவில் குளச்சலில் அனைத்து வங்கி, ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், நியமிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!”

Next Post
நாகர்கோவில் குளச்சலில் அனைத்து வங்கி, ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், நியமிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!”

நாகர்கோவில் குளச்சலில் அனைத்து வங்கி, ஏடிஎம்களில் கண்காணிப்பு கேமரா, காவலாளிகள், நியமிக்க இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு!!"

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In