நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 12
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கடினல்வயல் ஊராட்சியில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்தினையும், ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி பாப்பிரெட்டி குத்தகை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் முதல் மருதூர் தெற்கு வரை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 255.21 இலட்சம் மதிப்பீட்டிலும், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஞ்சநதிக்குளம் நடுசேத்தி ஊராட்சியில் தெற்கு முட்டகம் வரை ரூ. 23.50 இலட்சம் மதிப்பீட்டிலும் , தென்னடார் ஊராட்சியில் மேலக்காடு சாலையினை ரூ. 49.80 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் புஷ்பவனம் ஊராட்சியில் ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டிலும் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், வாய்மேடு ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 ஆவது மான்ய நிதியின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தில் ரூ.68.80 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டடம் கட்டும் பணி நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அதனைத்தொடர்ந்து வண்டுவாஞ்சேரி ஊராட்சி வெள்ளிக்கிடங்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் கரியாப்பட்டினம் ஊராட்சி செண்பகராயநல்லூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டும்; திட்டத்தின் கீழ் தலா ரூ.26.00 இலட்சம் என மொத்தம் ரூ.52.00 இலட்சம் மதிப்பீட்டில்; இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள், ஊராட்சி வெள்ளிக்கிடங்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5.32 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சமையலறை கட்டிடம் கட்டும் பணியையும் ஆயக்காரன்புலம்-3 மற்றும் தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யும் பணியினையும், கரியாப்பட்டினம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை குறித்தும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்தும், தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் உள்ள கிராம உழவர் சந்தையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இராஜன், பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

