நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் புதிய தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்; அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 11
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் புதிய தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று திறந்து வைத்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க திருப்பூண்டி கிழக்கு ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்ற விவசாய பெருமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கொண்டு காமேஸ்வரத்தில் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் காமேஸ்வரம் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 1500 க்கும் மேற்பட்ட விவசாய பெருமக்கள் பயனடைவார்கள் எனவும், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகாமையில் உள்ள ஊரில் சென்று விற்காமல், இங்கு திறக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் மூலம் விற்று விவசாய பெருமக்கள் பயனடையலாம் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்

இந்நிகழ்வின்போது இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், கீழையூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கௌசல்யா இளம்பரிதி, கீழையூர் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் பி.சௌரிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் க.ஜெயசுதா, துணைத் தலைவர் த.திராவிட செல்வி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

