தூத்துக்குடி.
தூத்துக்குடி கினஸ் அகடமியில் மத்திய அரசின் எஸ்.எஸ்.சி, எம்.டி.எஸ் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 09.02.2023 பிற்பகல் துவங்கியது.
துவக்க விழாவிற்கு பள்ளி கல்வி துறையில் பணிபுரியும் ரா. சிவகுருநாதன் தலைமை வகித்தார். கின்ஸ் அகடமியின் நிறுவனர் எஸ். பேச்சிமுத்து வரவேற்றார்.
அப்போது, அவர் பாரத பிரதமரின் பத்து லட்சம் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பினை தொடர்ந்து எங்களது கின்ஸ் அகடமியில் இலவச எஸ்.எஸ்.சி – எம்.டி.எஸ் வகுப்புகள் துவக்கியிருக்கிறோம். பல்வேறு கிராம பகுதி மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றார்.
பிரபல எஸ்.எஸ்.சி பயிற்றுநர் செல்வி. விக்னேஷ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது மத்திய அரசு முதன்முதலாக எஸ்.எஸ்.சி தேர்வை தமிழில் நடத்துகிறது. இதனால் தமிழக கிராமப்புற மாணவர்கள் அதிக அளவு தேர்வு எழுதுவது மட்டுமின்றி பெருமளவில் வெற்றியும் பெறுவார்கள். தமிழ் வழியில் படித்த மாணவர்கள் தற்போது அதிக அளவு மத்திய அரசு பணியில் வெற்றி பெற்று பணியிடம் பெற்று வருகின்றனர்.

மிக குறைந்த நாட்களில் தேர்வில் வெற்றிபெறும் வழிமுறை குறித்தும் அதற்கான பாடதிட்டம் குறித்தும் நாங்கள் உங்களுக்கு பல்வேறு குறிப்புகள் தருவோம். ஆகவே கடினமாக உழைக்கும் பட்சத்தில் நீங்கள் இந்த தேர்வில் வெற்றி பெற இப்போது இருக்கும் இந்த 60 நாட்களே போதுமானது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் கின்ஸ் அகடமி பயிற்றுநர்கள் ரேவதி, ஜோதிமணி, வினோத் மற்றும் திருமதி இலக்கியா ஆகியோர் கலந்து கொண்டனர். நீதித்துறையில் பணியிடம் பெற்றுள்ள கின்ஸ் அகடமி மாணவி செல்வி கே. வித்யா நன்றி கூறினார்

