வேதாரணியம் பிப்ரவரி 11
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் நாகை ரஸ்தா சின்னசாலையில் அமைந்துள்ள
அரசு கல்லூரி மாணவியர் விடுதியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,சிறுபான்மையினர் நலத்துறை,மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் நாகப்பட்டினம் இணைந்து நடத்தும் பள்ளி கல்லூரி விடுதி மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் க. சங்கர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக
வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் கலந்து கொண்டார் .தோப்புத்துறை பள்ளி மாணவ விடுதி காப்பாளர் விஸ்வலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட காப்பாளர் ஆசிரியர் சங்கத் தலைவர் P. வைரவமூர்த்தி,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியில்
திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துணைக்கண்ணன்,நல்லாசிரியர்கள் வீரப்பன், செங்குட்டுவன் மற்றும் திருத்துறைப்பூண்டி அலெக்சாண்டர்
ஆகியோர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இடையே அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சிறப்புரையாற்றினார்கள்.வேதாரணியம் அரசு கல்லூரி மாணவியர் விடுதி காப்பாளனி கலைவாணி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து இருந்தார். இறுதியில் நாகப்பட்டினம் பாலிடெக்னிக் விடுதி காப்பாளர் எம். அகிலன் நன்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி கல்லூரி விடுதி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

