ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பல்வேறு தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியன், ஈரோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கே.கே.நகர் சிஎஸ்ஐ ரோசட்டா பிரப் தேவாலயம், ஈரோடு சிஎஸ்ஐ வட்டகை தலைவர் சௌந்தர பாபு, கே.கே நகர் சிஎஸ்ஐ ரோசட்டா பிரப் தேவாலயத்தின் ஆயர் தலைவர் ஜான் ரவி மற்றும் ஈரோடு சாஸ்த்ரி நகர், பெதஸ்தா நசரேய திருச்சபை, நசரேய திருச்சபை பேராய சபை போதகர் மற்றும் மறைமாவட்ட கண்காணிப்பாளர் அம்சராஜ் ஆர்த்தோடாக்ஸ் திருச்சபை ஆயர் தலைவர் சார்லஸ் போஸ் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்துவ மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
கழக அமைப்புச் செயலாளர் திருவள்ளுர் மத்திய மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், தேர்தல் பிரிவு துணைச்செயலாளர் சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை, முன்னாள் தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத் தலைவர் ஜான் மகேந்திரன், திருவள்ளூர் மத்திய மாவட்ட பொருளாளர் ஜாவித், பூந்தமல்லி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், தேவலாய சேகர திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அலெக்ஸ் வட்டச் செயலாளர்கள் மில்லை ராஜா, துரைசிங்கம், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், வட்ட பிரதிநிதி மணிகண்டன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி ராஜா, தேவாலயத்தின் பாஸ்திரேட் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

