தூத்துக்குடி தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழகம் சார்பில் நடந்த 41வது சப்ஜுனியர் சிறுவர், சிறுமிக்கான மாநில அளவிலான பூப்பந்து தேர்வு போட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள திருவெற்றியூர் மைதானத்தில் நடந்தது.
இதில் தூத்துக்குடி மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தில் சார்பில் பங்கு பெற்ற தூத்துக்குடி எஸ்ஏவி மேல்நிலை பள்ளி மாணவர் கோபி கிருஷ்ணன் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இம்மாதம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெறும் தேசிய அளிவிலான பூப்பந்து போட்டியில் விளையாட உள்ளார். மாணவரையும் மாணவருக்கு பயிற்சி அளித்த எஸ்ஏவி பள்ளி உடற்கல்வி இயக்குனர் குப்புசாமியையம் பள்ளி நிர்வாகம், பள்ளி தலைமையாசிரியர் கிருபை வேல்முருகன் ஆசிரிய ஆசரியைகள் பள்ளி பழைய மாணவர்கள் சங்கத்தினர் பரிசு வழங்கி பாராட்டினர்.
தமிழக பூப்பந்தாட்ட கழக தலைவர் நடேசன், மாநில பொதுச்செயலாளர் எழிலரசன், மாநில துணைத்தலைவர் ஸ்ரீனிவாசன், மாநில பொருளாளர் பார்த்திபன், தூத்துக்குடி மாவட்ட பூப்பந்தாட்ட செயலாளர் வெங்கடேசன், மற்றும் மாநில நிர்வாகிகளுக்கும் எஸ்.ஏவி பள்ளி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய பூப்பந்தாட்ட போட்டிக்கு எஸ்ஏவி பள்ளி மாணவர் கோபி கிருஷ்ணன் தேர்வு பெற்றுள்ளார்.

