மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவள்ளுர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்ட தொடக்க விழாவை துவக்கி வைத்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக கல்லூரியில்; இன்று கல்லூரி மாணவியர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வி பயிரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை 05.09.2022 அன்று துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்கு புதுமைபெண் திட்டம் என தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று திருவள்ளுர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் 2 ஆம் கட்ட தொடக்க விழாவை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைபெண் திட்டத்தில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை பெறுவதற்கான வங்கி பற்று அட்டை 49 கல்லூரிகளில் படிக்கும் 1603 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து நகர் மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சரபோஜி, மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், கல்லூரி மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.