நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து சென்னை தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரி சி.யூனுஸ் பெங்களுர் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பிரபாகரன் ஒய்.போயோ ஆகியோர் கொண்ட மத்திய குழு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 8
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து சென்னை தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரி சி.யூனுஸ் பெங்களுர் தரக்கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் பிரபாகரன் ஒய்.போயோ ஆகியோர் கொண்ட மத்திய குழு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் ஆகியோர் முன்னிலையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் 01.02.2023 முதல் 04.02.2023 வரை பருவம் தவறி பெய்த மழையால் நெல்லின் ஈரப்பதம் குறித்து பார்வையிடுவதற்காக மத்திய குழு அலுவலர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து தலைஞாயிறு ஒன்றியம் தலைஞாயிறு நேரடி நெல் கொள்முதல் நிலையம், திருக்குவளை வட்டம் கச்சநகரம், வலிவலம் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம், கீழ்வேளுர் வட்டம் பட்டமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையம், மற்றும் நாகப்பட்டினம் வட்டம் சிராங்குடி புலியூர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில்; பருவம் தவறி பெய்த மழையால் அதிக ஈரப்பதமுள்ள நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதற்று கொண்டுவருவதால் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய, மாநில குழுவானது நெல் ஈரப்பத விபரங்கள் குறித்து விவசாயிகளிடம் கலந்துரையாடி, மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட அறிக்கையி;ன் அடிப்படையில்; ஆய்வு செய்தனர்.

இவ்வாய்வில் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் இராஜராஜன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அக்கண்ட ராவ், மற்றும் வேளாண்மைதுறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

