• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

policeseithitv by policeseithitv
February 8, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வேதாரணியம் பிப்ரவரி 8

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் மற்றும் சிறப்பு பழுது பார்க்கும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் புஷ்பவனம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டில் மாணவ மாணவியர் கழிப்பறை கட்டடம் கட்டும் பணி மற்றும் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் பழுது நீக்கும் பணி மற்றும் வர்ணம் தீட்டும் பணி நடைபெறுவதையும், செம்போடை ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டிலும், தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வேதாரண்யம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலும், வேதாரண்யம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.12.75 இலட்சம் மதிப்பீட்டிலும், கருப்பம்புலம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.12.75 இலட்சம் மதிப்பீட்டிலும், பன்னாள் ஊராட்சியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டிலும், பஞ்சநதிக்குளம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.6.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மருதூர் தெற்கு ஊராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், தகட்டூர் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.3.25 இலட்சம் மதிப்பீட்டிலும், தாணிக்கோட்டகம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11 இலட்சம் மதிப்பீட்டிலும் சிறப்பு பழுது பார்க்கும் பணிகளான மின் பழுது, புதுப்பிக்கும் பணிகள், சோலார் மற்றும் சி.சி.டிவி பொருத்தும் பணிகள் போன்றவைகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கருப்பம்புலம் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டும்; திட்டத்தின் கீழ் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 ஆவது மான்ய நிதியின் கீழ் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கர், ராஜீ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் “பதப்படுத்தும் உபயோகம்”; எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகளை உணவிற்காக விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தகவல்

Next Post

தூத்துக்குடி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி ஆணையருக்கு வக்கீல் ரமேஷ்பாண்டியன் வேண்டுகோள்

Next Post
தூத்துக்குடி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி ஆணையருக்கு வக்கீல் ரமேஷ்பாண்டியன் வேண்டுகோள்

தூத்துக்குடி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாநகராட்சி ஆணையருக்கு வக்கீல் ரமேஷ்பாண்டியன் வேண்டுகோள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In