• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் “பதப்படுத்தும் உபயோகம்”; எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகளை உணவிற்காக விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தகவல்

policeseithitv by policeseithitv
February 7, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் “பதப்படுத்தும் உபயோகம்”; எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகளை உணவிற்காக விற்பனை செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தகவல்

 

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் 23.01.2023 அன்று தேசிய அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்புத்திட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.அ.அருண் தம்புராஐ;, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவுப்பாதுகாப்புச் சட்டப்படி உணவிற்காக விற்பனை செய்யப்படும் உப்பில் கட்டாயம் அயோடின் சத்தினை கலந்துதான் கொடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பாக்கெட் உப்பு தயாரிப்பாளர்கள் அயோடின் கலக்காத உப்பினை பாக்கெட்டில் அடைத்து உப்பு பாக்கெட்டின் அடிப்பகுதியில் பதப்படுத்தும் உபயோகத்திற்கு மட்டும் என சிறிய எழுத்துக்களில் குறிப்பிட்டு நுகர்வோர்களை ஏமாற்றும் நோக்கில் உணவிற்காக விற்பனை செய்து வருவதாகவும், போலி முகவரியிட்ட உப்பு கவர்களில் சாதா உப்பினை அடைத்து அயோடின் கலந்த உப்பு என ஏமாற்று வணிகத்தில் ஈடுபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் உணவுப்பாதுகாப்புத்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் 22 மளிகை கடைகாரர்களிடம் இருந்து ரூ.58,000 வரை தண்டனைத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது உப்பள பகுதியில் காவல் துறை அலுவலர்களால் போலி முகவரியிட்ட உப்பு பண்டல்களை ஏற்றிச்சென்ற வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு உணவுப்பாதுகாப்புத்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

போலி முகவரியிட்ட மற்றும் முழு முகவரியில்லாத உப்பு பாக்கெட்டுகளை பாக்கெட் செய்திட உப்பள குத்தகைதாரர்கள் அனுமதிக்க கூடாது எனவும் இது தொடர்பாக உரிய ஆய்வு பணி மேற்கொள்ள இந்திய அரசு உப்புத்துறை அலுவலர்களுக்கும், போலி முகவரியிட்ட கவர்களில் உப்பினை அடைத்து விற்பனையில் ஈடுபடும் நபர்கள் அவர்களது குற்றத்திற்கு துணைபோகும் தொழிலாளர்கள் ஆகியோர் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் ஜனவரி 26-ம் நாள் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பதப்படுத்தும் உபயோகம் எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டினை உணவிற்காக விற்பனை செய்வதை தடை செய்து தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் அனைத்து 2 கிலோ அதற்கு மேற்பட்ட அளவுகளில் மட்டுமே இருப்பதை அலுவலர்கள் உறுதி செய்திடவும, மளிகை கடைகளில் பதப்படுத்தும் உபயோகம் எனக் குறிப்பிட்ட உப்பு பாக்கெட்டுகள் உணவிற்காக விற்பனை செய்பவர் மீது உணவுப்பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், கூடுதல் தண்டணைத்தொகை வசூல் செய்யவும், எடை குறைவு, போலி முகவரியிட்டு உப்பு வணிகம் செய்யும் நபர்கள் மீது தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவும், போலி முகவரியிட்ட மற்றும் முழு முகவரியில்லாத உப்பு பண்டல்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்திடவும், உப்பள பகுதியில் பாக்கெட் உப்பு தயார் செய்யும் இடங்களை சுழற்சி முறையில்; சுகாதாரத்துறை, உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர்களை உள்ளடக்கிய குழு தொடர்ந்து உப்பள பகுதியை கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்; துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய்

மச்சோடா.

Previous Post

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சுகாதார கேடு விழித்துக்கொள்வாரா அமைச்சர் சேகர்பாபு?

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In