நாகப்பட்டினம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் பிப்ரவரி 6
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 209 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் வட்டம், சாமந்தான்பேட்டை பகுதியில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பக வளாகத்தில் அமைந்துள்ள அனுபவம் முதியோர் இல்லத்தை சேர்ந்த 3 முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000 க்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் வட்டம், சிராங்குடி புலியூர் கிராமத்தை சாந்தி க/பெ குமார் என்பவருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 க்கான ஆணை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த த?கலைச்செல்வன் என்ற மாற்றுத்திறனாளிக்கு பிரியம் அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட செயற்கை கால் போன்றவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும்; அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

