நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் ஆலங்குடி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் நடைபெற்ற அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஐஐ பிறதுறை பணிகளை ஒருங்கிணைந்து திட்டம் செயல்படுத்துவதற்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 39 ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ஐஐ திட்டப்பணிகள் தெரிவு செய்யப்பட்டு கிராம ஊராட்சிகளில் வளங்களை சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் கிராமங்களில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும் .
மாற்றுத்தினாளிகள் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கூட்டுறவுத்துறை ஆகிய துறைகளில் இருந்து அலுவலர்கள் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று மனுக்கள் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
மேலும் நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் கலசம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் ஆலங்குடி ஊராட்சியை சேர்ந்த மாணவி ஆர்.கிருஷ்ணவேணி மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பிற மாநில நாட்டியம் குழுப்போட்டியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு கேடயத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் முருகேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் தி.ரேவதி, ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

