நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருவம் தவறிய கன மழையினால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
நாகப்பட்டினம் பிப்ரவரி 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பருவம் தவறிய கன மழையினால் பயிர் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஆலத்தூர் ஊராட்சி, கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம், சாட்டியக்குடி ஊராட்சி, மற்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம், காடந்தேத்தி ஊராட்சி ஆகிய ஊராட்சி பகுதிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது…
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க டெல்டா மாவட்டங்களில் 01.02.2023 முதல் 04.02.2023 வரை பெய்த திடீர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில், டெல்டா மாவட்டங்களில் இன்றைய தினம் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்யப்படுகிறது. அதன்படி தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்பொழுது பெய்த திடீர் கனமழையால் தமிழகத்தில் 1,27,000; ஹெக்டர் சுமார் 7 மாவட்டங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் விவசாய பெருமக்கள் எங்களிடம் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய காப்பீட்டு தொகையை வழங்கவும், ஈரப்பதத்தின் அளவை தளர்த்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சம்பா தாளடி பருவத்தில் 64,808 ஹெக்டர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் இதுவரை 11,156 ஹெக்டர் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் தரிசில் உளுந்து பச்சை பயறு 10,268 ஹெக்டரும், நிலக்கடலை 825 ஹெக்டரும், எள் 45 ஹெக்டரும் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 01.02.2023 முதல் 04.02.2023 வரை சராசரியாக 172 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பருவம் தவறி பெய்த இந்த கனமழையினால் சம்பா தாளடி நெற்பயிர்கள் 27,817 ஹெக்டர் நீரில் சாய்ந்துள்ளது. இதில் நாகப்பட்டினம் வட்டாரத்தில் 3,287 ஹெக்டரும், திருமருகல் வட்டாரத்தில் 5,326 ஹெக்டரும், கீழ்வேளுர் வட்டாரத்தில் 6,729 ஹெக்டரும், கீழையூர் வட்டாரத்தில் 2,575 ஹெக்டரும், வேதாரண்யம் வட்டாரத்தில் 7,520 ஹெக்டரும், தலைஞாயிறு வட்டாரத்தில் 2,200 ஹெக்டரும் சம்பா தாளடி நெற்பயிர் நீரில் சாய்ந்துள்ளது.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் நெல் தரிசில் சாகுபடி செய்த உளுந்து பச்சை பயறு 10,268 ஹெக்டரும், நிலக்கடலை 489 ஹெக்டரும், எள் 45 ஹெக்டர் என முழுவதுவாக நீரில் மூழ்கியுள்ளது. மேலும் தண்ணீர் வடியும் நிலையை பொறுத்து மறு கணக்கீடு செய்யப்படும் என மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், திருமருகல் அட்மா வட்டார குழுத் தலைவர் செல்வ செங்குட்டுவன், கீழ்வேளுர் அட்மா வட்டார குழுத் தலைவர் ப.கோவிந்தராஜன், தலைஞாயிறு அட்மா வட்டார குழுத் தலைவர் மகா குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், விவசாய பெருமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

