• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடலுாரில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு : PMT நிறுவனர் இசக்கிராஜா தேவர், தென்னிந்திய பார்வேடு பிளாக் தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.!! இந்து அமைப்பினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் எழுச்சி மாநாடாக மாறியது!!!!

policeseithitv by policeseithitv
February 2, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கடலுாரில் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு : PMT நிறுவனர் இசக்கிராஜா தேவர், தென்னிந்திய பார்வேடு பிளாக் தலைவர் திருமாறன்ஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.!!  இந்து அமைப்பினர், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டதால் எழுச்சி மாநாடாக மாறியது!!!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கடலூர்,பிப்,2

கடலுாரில், சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டின் இரண்டாம் நாளில் ஹிந்து அமைப்பினர்,
சாதுக்கள், சன்னியாசிகள் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் மாபெரும் எழுச்சி மாநாடாக காணப்பட்டது.
தமிழகத்தில் சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் இந்து கோவில்களை இடிப்பது, இந்து தெய்வங்களை இழிவுபடுத்துவது போன்ற வெறுப்பு பிரசாரங்கள் நடந்து வருகிறது.. இதனை முறியடிக்கும் வகையில், சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு கடலுாரில் இரண்டு நாட்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் சாலை வி.சி.செல்வ மகாலில் நேற்று முன்தினம் மாநாடு துவங்கியது..
திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே உள்ள ஆயிர வைசிய திருமண மண்டபத்தில், மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் வரவேற்றார். மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் மற்றும் அனந்த பத்மநாபாச்சாரியார் பங்கேற்ற வைணவ அமர்வு, சிவசித்தர் தாமோதரன் குழுவினரின் திருவாசக விண்ணப்ப நிகழ்வு நடந்தது..
மாலையில், மஞ்சக்குப்பம் மைதானத்தில் மாநாட்டின் நிறைவாக பொதுக்கூட்டம் நடந்தது. இந்து மக்கள் கட்சியின் கடலுார் மாவட்ட தலைவர் தேவா வரவேற்றார்.
ஜெய் ஸ்ரீராம் சேவாங்க அமைப்பாளர் இளங்கோ, இந்து மக்கள் கட்சி மாநில கொள்கை பரப்பு செயலாளர் திருமுருகனார், இந்து மாநில அமைப்புக் குழு தலைவர் பொன்னுசாமி, நாகமலை சித்தர் சண்முகசுந்தர பாபுஜி, இந்து மாநில அமைப்பு பொதுச் செயலாளர் செந்தில், பறவையர் பேரவை தலைவர் ராஜசேகர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அறக்கட்டளை (PMT) நிறுவனர் தூத்துக்குடி இசக்கி ராஜா தேவர், தென்னிந்திய பார்வேடு பிளாக் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்டோர் இந்த மாநாட்டில் சிறப்புரையாக பல்வேறு கருத்துகளை பேசினர்.
சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை (PMT) நிறுவனர் தூத்துக்குடி இசக்கி ராஜா தேவருக்கு அவரது அமைப்பை சார்ந்த சென்னை PMT மாவட்ட தலைவர் வேங்கை வீரா, தலைமையில் ஏராளமான நிர்வாகிகள், மற்றும் கவிஞர் மற்றும் பாடகருமான டிசி துரைப்பாண்டியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் இசக்கி ராஜா தேவருக்கு பொன்னாடை போர்த்தி மாநாட்டு நிகழ்ச்சியின் போது வரவேற்றனர்.


அதனைத் தொடர்ந்து இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் நிறைவுரையாற்றினார்.
இரண்டாம் நாள் மாநாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இந்து அமைப்பினர் மற்றும் சன்னியாசிகள் துறவிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரளாக பங்கேற்றனர்.
கடலுாரில் நடைபெற்ற சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாட்டில் பல்வேறு தரப்பினர் மற்றும் பொதுமக்கள் ஆன்மீகவாதிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் சனாதன இந்து தர்ம எழுச்சி மாநாடு
ஒரு எழுச்சி மாநாடாக மாறியது..

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மூன்றாம் நாள் விழா

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54  ம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54   ம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த தென்னம்புலம் கடை தெருவில் பேரறிஞர் அண்ணாவின் 54  ம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In