சென்னை,பிப்,1
செய்தித்துறை இயக்குநர் உள்பட தமிழகம் முழுவதும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய செய்தித்துறை இயக்குநராக மோகன், இந்து அறநிலையத்துறை ஆணையராக முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், திருநெல்வேலி மாவட்ட கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார். மாநில சிறுபான்மையின ஆணைய உறுப்பினர் செயலாளர் டி.ரவிச்சந்திரன், தென்காசி கலெக்டராகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வி.பி.ஜெயசீலன் விருதுநகர் கலெக்டராகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி கலெக்டராகவும், விழுப்புரம் கலெக்டராக இருந்த மோகன் செய்தித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர்
சென்னையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக பணியாற்றியுள்ளார் அதன் மேல் டி.மோகன், விழுப்புரம் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டு இருந்தார்.
டி.மோகனுக்கு சொந்த ஊர் தஞ்சாவூர். இவர் தனது பள்ளிப்படிப்பை அங்குள்ள செயின்ட் ஜான் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் என்ஜினீயரிங் படிப்பை காரைக்குடி அழகப்பா என்ஜினீயரிங் கல்லூரியிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படிப்பையும் முடித்தார்.
தொடர்ந்து, 2005-ம் ஆண்டில் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காஞ்சீபுரம் துணை ஆட்சியர் (பயிற்சி) பணியில் சேர்ந்தார். அதன் பின்னர் 2¼ ஆண்டு புதுக்கோட்டையில் கோட்டாட்சியராக பணியாற்றிய நிலையில் பதவி உயர்வு பெற்று சென்னையில் டாஸ்மாக் பொது மேலாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொது மேலாளராகவும், பொது மரபுத்துறையிலும் பணியாற்றிய அவர், கவர்னரின் துணை செயலாளராக 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையராகவும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராகவும் பணியாற்றிய நிலையில் அங்கிருந்து மாற்றப்பட்டு விழுப்புரம் மாவட்ட கலெக்டராக பணியாற்றினார். கடந்த
16/06/2021 விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட மோகன் ஒரு வருடம் 6 ஆறு மாதங்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணியாற்றியுள்ள நிலையில் தற்போது தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த மோகன் தமிழக
செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனராக தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது .

