ஆளுங்கட்சியின் தவறுகளை கண்டிக்க துணிவு கூட இல்லாத தமிழக அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அனைத்து தரப்பு பொதுமக்கள் உலாவிடும் இயற்கை சீற்றமான கடலில் தனிநபர் உரிமை கொள்ளும் விதமாக கலைஞர் கருணாநிதிக்கு நினைவாக பலகோடி செலவில் பேணு அமைக்கப்படுவது கண்டிக்கத்தக்கது என்ற உண்மையை உரக்கச் சொல்லிய சீமானுக்கு வாழ்த்துக்கள் என்று மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக மாவட்ட அளவில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சி செயல்படும் என்று எல்லோரும் எண்ணுகிறோம் ஆனால் அப்படி இல்லை ஆளுங்கட்சிக்கு துணையாக எதிர்க்கட்சி செயல்படுகிறது. காரணம் இவர்கள் ஆளுங்கட்சியாக மாறுகின்ற பொழுது அவர்கள் எதிர் கட்சியாக வருகின்ற பொழுது ஒரு பரஸ்பர உறவை வலுப்படுத்துவதற்காக இந்த திட்டத்தை அவர்கள் அரங்கேற்றுகிறார்கள். வெளியே எதிர்ப்பது போல் எதிர்க்கிறார்கள். ஆனால் உள்ளே அனைத்து வேலைகளும் பல கோடி கொடுக்கப்பட்டு பல கோடி வாங்கப்பட்டு பல கதைகள் முடிக்கப்படுகிறது. என்ற உண்மை தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆகையால் தான் எதிர்க்கட்சியினர் வாய் திறக்க மறுக்கிறார்கள். எதிர்க்கட்சியினர் எதிர்ப்பது போல் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

