

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி முக்கிய அறிவுரை வழங்கினார். அதில் வரலாற்று போக்கிரி பதிவேடு உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதியில் உள்ள வெடிபொருட்கள் வைத்துள்ள குடோன்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் பதற்றமான வாக்குச்சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை கஞ்சா விற்பனை போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் இருக்கும் எதிரிகளுக்கு நீதிமன்றத்தில் பிடி வாரன்ட் பெற்று அவர்களை கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் சேரன்மகாதேவி ஏ.எஸ்.பி பிரதீப் திருநெல்வேலி ஊரக டி.எஸ்.பி அர்ச்சனா, நாங்குநேரி டி.எஸ்.பி செல்வி ஸ்ரீ லிசா ஸ்டெபிலா தெரஸ், அம்பாசமுத்திரம் டி.எஸ்.பி பிரான்சிஸ், வள்ளியூர் டி.எஸ்.பி (பொறுப்பு)உதய சூரியன் மற்றும்
தேர்தல் பிரிவு டி.எஸ்.பி (பொறுப்பு) ஜெயபால் பர்னபாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர் .

