வருகைதந்துள்ளனர். இந்நிலையில் பொது மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும், அச்சமின்றி வாக்களிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து இளங்கடை சந்திப்பு வரை நடைபெற்றது.



இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஈஸ்வரன் அவர்கள், மணிமாறன் அவர்களும், நாகர்கோவில் உட் கோட்ட காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் அவர்கள், தேர்தல் பிரிவு பொறுப்பு காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு பீட்டர் பால்துரை ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சாம் வேதமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் 4 பேர், மத்திய துணை இராணுவ படையினர் (BSF) – 60 பேர், தாலுகா காவலர்கள் (Local)- 45 பேர் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் – 50 பேர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 60 பேர் என அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் உட்பட மொத்தம் 225 பேர் கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

