நாகப்பட்டினம் வட்டம் அழிஞ்சமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஆ.தி.ந உயர்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு – மனித நேய வாரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகத்தலைவர் என். கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் பிப்ரவரி 1
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா ஒரு வார நிகழ்ச்சியாக நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு – மனித நேய வாரவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
எனவே பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகள் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், கண்ணியம் மற்றும் தன்னம்பிக்கை போன்றவற்றை கற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் கைப்பேசிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவது போன்ற அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகள் தவறான செயல்பாடுகளில் ஈடுபடுவதை பெற்றோர்கள் கண்காணித்து அவர்களை உரிய வழியில் நடத்த வேண்டும், குழந்தைகளுக்கு தீண்டாமை ஒழிப்பு – மனித நேயம் குறித்தும் பெற்றோர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு – மனித நேய வாரவிழாவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் ஒன்றியக் குழுத்தலைவர் வே.அனுசியா, நாகப்பட்டினம் மாவட்ட குழு உறுப்பினர் வி.சரபோஜி, பாலையூர் ஊராட்சி மன்ற தலைவர் கா.கமலாதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் து. ஜமுனாராணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

