தூத்துக்குடி
01-02-2023
முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி போல்நாயக்கன்பேட்டை தாலுகா ரெட்டியார் சங்கத்தில் வைத்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் படத்திற்கு மாவட்ட தலைவர் S.பெத்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர்கள் தூவி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில். தாலுகா ரெட்டியார் சங்க தலைவர் சண்முகராஜ், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், சங்க செயலாளர் அப்பனசாமி, ஜவகர்லால் நேரு, சரவணன்குமார், சிவசங்கர நாராயணன், குமார், சங்கரலிங்கம், ஆண்டிச்சாமி, ராமசாமி ரெட்டியார் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

