நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜனவரி 31
நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அவுரித்திடலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஓயா உழைப்பின் ஓராண்டு- கடைகோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற தலைப்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை இன்று திறந்து வைக்கப்பட்டு 10 நாட்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறை சார்பில் அரசு துறைகளை ஒருங்கிணைத்து அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து வைக்கப்பட்டுள்ள துறை சார்ந்த கண்காட்சி அரங்குகளையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு தமிழக அரசின் திட்டங்களை தெளிவாக தெரிந்து கொள்ள ஏதுவாக இந்த கண்காட்சியானது அமையும் எனவும், மேலும், பின் தங்கிய மாவட்டமாக இருந்த நம் மாவட்டமானது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் நல்லாட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வளர்ச்சி பாதையில் செல்லப்படுகிறது அனைத்து துறைகளிலும் நல்ல முன்னேற்றங்கள் காணப்படுகின்றன எனவும் மாவட்ட ஆட்சித் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க நாளில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தினை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து அட்மா வட்டார குழுத் தலைவர் மகா குமார், நகர மன்ற உறுப்பினர் திலகர் , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

