நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 31
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 212 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் திருக்குவளை வட்டத்தில், கொடியாளத்தூர் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் த/பெ சுந்தரமூர்த்தி என்பவருக்கு இலவச வீட்டுமனை பட்டாவினையும், நாகப்பட்டினம் வட்டத்தில், வெளிப்பாளையத்தை சேர்ந்த பக்கிரியம்மாள் க/பெ மணி என்பவரது ஆதரவற்ற பேரன் சாய்பிரகாஷ் என்பவரின் படிப்பு மற்றும் வளர்ப்பிற்காக மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து ரூ.20,000 உதவித்தொகையினை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
முன்னதாக தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியினையும் அதனைத் தொடர்ந்து தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் எடுத்துக் கொண்டனர்.
இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன் மற்றும்; அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

