வேதாரணியம் ஜனவரி 31
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் எஸ் எஸ் அறக்கட்டளை சார்பில் மார்ச் 2022 அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்று தந்த ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு
விழா நடைபெற்றது.
விழாவில் முதலில் மாணவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாட
முதுநிலை ஆசிரியர் க. தியாகராஜன் வரவேற்புரை
ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் சி அன்பழகன் விழாவிற்கு தாங்கினார்


எஸ் எஸ் அறக்கட்டளையின் தலைவரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவரும், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவருமான எஸ் எஸ் தென்னரசு, எஸ். கே .எம் .எஸ் . நிறுவனங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் பா. பிரகாஷ் ,வேதாரணியம் நகர்மன்ற உறுப்பினர் என் வி கே ராஜு,பள்ளி மேலாண்மை குழு தலைவர் ர.தமிழ்ச்செல்வி
ஆகியோர் முன்னிலை வகிக்கவும், வேதாரணியம் நகர மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாகை மாவட்டத் தலைவரும்,லயன்ஸ் முன்னாள் மாவட்ட ஆளுநர்
எஸ். வேதநாயகம் ,தோப்புத்துறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(இந்து) தலைமை ஆசிரியர் புயல் சு.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவும், பள்ளியின் தொழிற்கல்வி ஆசிரியர் சி நாகராஜன் வெற்றி படிக்கட்டுகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றவும், பட்டதாரி தமிழாசிரியர் க. இளஞ்செழியன்
இளைஞர்களின் எதிர்காலம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.2022 அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுத் தந்த 12 ம் வகுப்பு ஆசிரியர்களான மு.பாலசுப்ரமணியன்,இரா. மேகமொழி,த. புகழேந்தி,தி. சுப்பிரமணியசாமி,வி. அன்பழகன்,சி. நாகராசன்,க.செந்தில்குமார் ஆகிய ஏழு ஆசிரியர்களை
பாராட்டி பரிசளிக்கப்பட்டது. பின் வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு அளிக்கப்பட்டது.
முதுநிலை ஆசிரியர் மு பாலசுப்பிரமணியன் ஏற்புரை ஆற்றினார். இறுதியில் முதுநிலை தமிழாசிரியர் கோ. கார்த்திகேயன் நன்றி உரையாற்றினார்.இந்நிகழ்ச்சி தொகுப்பு முதுநிலை ஆசிரியர் கோ.
ஆதவன். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக மற்றும் பள்ளி மேலாண் குழுவினர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

