• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் வளர்ச்சியடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் – மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமாக பேசினார்.

policeseithitv by policeseithitv
January 30, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி முழுவதும் வளர்ச்சியடைய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் –  மேயர் ஜெகன் பெரியசாமி உருக்கமாக பேசினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கனகராஜ், பொன்னப்பன், இசக்கிராஜா, ராமகிருஷ்ணன், ஜெயசீலி, அந்தோணி பிரகாஷ் மார்ஷல், பவானி மார்ஷல், சரண்யா, அதிஷ்டமணி, நாகேஸ்வரி, ஜெபஸ்டின் சுதா, ஜாக்குலின்ஜெயா, பேபி ஏஞ்சலின், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், கம்யூனிஸ்ட் முத்துமாரி உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேறிய பணிகளுக்கு அமைச்சர் கீதாஜீவனுக்கும் மேயருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

அதிமுக கவுன்சிலர் வெற்றிச் செல்வன், வக்கீல் மந்திர மூர்த்தி உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய சாலை, கால்வாய், மின்விளக்கு, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளையும், நாய்களையும் தடுப்பது, பூங்காக்கள் வேண்டியும், குடிநீர் முறைப்படுத்தி வழங்க கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ் ராஜேந்திரன் ஆகியோர் பதிலுரை வழங்கினார்கள்.

பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதிலுரை வழங்கி பேசுகையில்: மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டு பகுதிகளிலும் முழுமையான பணிகள் நல்ல முறையில் நடைபெற கவுன்சிலர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 20 அடி, 40 அடி சாலைகளில் எண்ட் டூ எண்ட் முழுமையாக புதிய சாலைகள் அமைக்கப்படும். அதில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்படும். எதிர்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறுகின்றன. இதில் பாராபட்சம் யாருக்கும் கிடையாது. மாநகராட்சியில் அனைத்து திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படும். 151 பூங்கா இருக்க வேண்டிய இடத்தில் 40 பூங்காக்கள் மட்டுமே இருந்து வருகின்றன. அதையும் கண்டறியப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்படும். புதிதாக திறக்கப்பட்டுள்ள பல பூங்காக்களுக்கு மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து கண்டுகளித்து மகிழ்ச்சியோடு திரும்பிச் செல்கின்றனர். இதுபோன்ற செயல்கள் மூலம் ஏழைகளின் சிரிப்பின் மூலம் இறைவனை காண்கிறோம். எண்ணற்றப் பணிகள் நம்;மை எதிர்நோக்கி இருக்கின்றன. தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் அனைத்து கட்டமைப்புகளும் சில மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு புதிய பொழிவுடன் ஜொலிக்கும் என்று பேசினார்.

திமுக கவுன்சிலர்கள் முத்துவேல், தெய்வேந்திரன், ஜெயசீலி, மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ் உள்ளிட்டோர் மேயர், ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மாநகர வளர்ச்சிப் பணிகள் குறித்து 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், பட்சிராஜ், விஜயகுமார், மரியகீதா, கண்ணன், சரவணக்குமார், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், தெய்வேந்திரன், சுயம்பு, ஜான், ஜாண்;சிராணி, ரிக்டா, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பககனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தனலட்சுமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், காந்திமதி, உதவி ஆணையர்;கள் தனசிங், சேகர், சுகாதார அலுவலர் ஸ்டாலின் பாக்கியநாதன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம். மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தி தொகுப்பு : எம். ஆத்திமுத்து

Previous Post

வேதாரணியத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி அமைப்புச் செயலாளர் பி .வி .கே .பிரபு செய்தியாளர்கள் சந்திப்பு. 

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In