வேதாரணியத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி அமைப்புச் செயலாளர் பி .வி .கே .பிரபு செய்தியாளர்கள் சந்திப்பு.
வேதாரண்யம் ஜனவரி 30
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் மீது அதிமுக ஓபிஎஸ் அணி அமைப்பு செயலாளர் பி.வி.கே.பிரபு சவால் விடுத்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது “மறைந்த ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈவேரா திருமகன் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரின் மறைவால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருக்கின்ற தேர்தல் பணிக்குழுவில் என்னை நியமித்த கழக இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் எம்எல்ஏ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வீரனுக்கு அழகு களத்தில் நின்று போட்டியிடுவது என்று கூறுவார்கள் அதைப்போல கட்சி தேர்தலில் போட்டியிட்டு உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம் என்ற வகையில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தொண்டர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து தேர்தலில் வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளார். இடைத் தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் வாங்கும் ஒரு வாக்குகளும் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையிலான இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கும் வகையிலும் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமைக்கான அங்கீகாரமாகவும் பார்க்க வேண்டும். போட்டியிடும் வேட்பாளரை ஓபிஎஸ் வரும் 31ஆம் தேதி அறிவிப்பார். இந்த இடைத்தேர்தலில் மூலம் திமுக ஆட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை மக்களிடம் முன்நிறுத்தி நீதி கேட்க இருக்கின்றோம் வாக்கு கேட்க இருக்கின்றோம். கண்டிப்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் ஆதரவை எங்களுக்கு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. நியாயம் பக்கம் நீங்கள் போட்டியிடுவதாக தெரிவித்துவிட்டு இன்னொரு பக்கம் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்று சொல்கிறீர்களே முரண்பாடாக இருக்கின்றது என்று சிலர் கேட்கின்றனர். இதில் எந்த முரண்பாடும் கிடையாது. நாங்கள் போட்டியிடுவோம் என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்து விட்டோம் இருந்தாலும் கூட்டணி தர்மம் என்று ஒன்று உள்ளது. கூட்டணி கட்சியான பாஜக ஒரு தேசிய கட்சி. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் ஒரு தேசிய கட்சி. தேசிய கட்சியை எதிர்த்து மற்றொரு தேசிய கட்சி போட்டியிடுவது எந்த தவறும் கிடையாது. அதிமுக இந்த தேர்தலில் இரண்டு அணியாக போட்டியிட உள்ளது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். இந்த சூழ்நிலையில் அதிமுக இரண்டு அணிகளாக போட்டியிட்டு திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் சிதறுவதைவிட திமுகவின் எதிர்ப்பு வாக்குகள் ஒன்று சேர வேண்டும், பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் தேசிய கட்சி என்ற அடிப்படையிலும்
யோசிப்போம் என்று தெரிவித்துள்ளார்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

