தூத்துக்குடி
மாப்பிள்ளையூரணி கிழக்கு பகுதி வடக்கு சோட்டையன் தோப்பு ஆ.சண்முகபுரம் மேல்பகுதி சுற்றுவட்டார வியாபாரிகள் சங்க 11வது ஆண்டு விழா ஆ.சண்முகபுரத்திலுள்ள கு.காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் கணேசன் தலைமை வகித்தார். செயலாளர் ரத்தினக்குமார் பொருளாளர் பெரியசாமி துணைத்தலைவர் சேகர், துணைச்செயலாளர் மெய்யராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கௌரவ ஆலோசகர் ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார்.
விழாவில் வியாபாரிகளுக்கு தொழில்கடன் 10 நபருக்கு 5 லட்சம் மற்றும் 300 மாணவ மாணவிகளுக்கு நோட்புக் ஆகியவற்றை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான சரவணக்குமார் வழங்கி பேசுகையில் வணிகர்களும் அரசும் இணைந்து உழைத்தால் தொழில்புரட்சி ஏற்படும் அனைத்து பகுதி வியாபார பிரமுகர்கள் தொழில்கடன் மூலம் நல்லமுறையில் தொழில்கள் செய்து தொடர்ந்து உங்களுடைய வளர்ச்சிக்கு நாங்கள் உத்திரவாதம் அளிக்கும் வகையில் வங்கியில் வழங்கப்படும் தொழில்கடன்களை முறையாக செலுத்தி பலனடைய வேண்டும். இந்த சங்கம் அடுத்த முறை ஆண்டுவிழா கொண்டாடுபடும் போது சொந்த கட்டிடத்தில் விழா நடைபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி செயலாளர் பாஸ்கர், பொருளாளர் ராஜலிங்கம், தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், ஆகியோர் பேசுகையில் வியாரிகள் ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் நம்முடைய பொருட்களை பாதுகாக்கும் வகையில் கேமரா பொருத்தி கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களை தேவையில்லாமல் ஈடுபடுபவர்களை எளிதில் அடையாளம் காணமுடியும் ஒற்றுமையின் இலக்கணமாக இந்தசங்கம் அருகிலுள்ள பல சங்க நிர்வாகிகளையும் அழைத்து நடத்துவது முன் உதாரணமாக உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் கூறியதை போல் அவர் உங்களுக்கு இடம் வாங்கி கொடுப்பார். கட்டிடத்தை கட்டுங்கள் திறப்பு விழாவில் இணைவோம். என்று பேசினார்கள்.

விழாவில் மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க மேலாளர் பாலமுருகன், சங்க கௌரவ ஆலோசகர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், சட்ட ஆலோசகர் வக்கீல் அர்ஜுன், பல்வேறு சங்க நிர்வாகிகள் செந்தில்ஆறுமுகம், மாரியப்பன், உள்பட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட வியாபார பெருமக்கள் கலந்து கொண்டனர்.

