நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு ரூ.90,89,347 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாகப்பட்டினம் ஜனவரி 26
நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 81 பயனாளிகளுக்கு ரூ. 90,89,347 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் உடன் உள்ளார்.
இந்நிகழ்ச்சியினை தொடர்ந்து காவல்துறை, வருவாய்த்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, சுகாதாரத்துறை, செய்தித்துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 170 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.52,700 மதிப்பீட்டில் 6 நபர்களுக்கு இணைப்பு மூன்று சக்கர சைக்கிள், மடக்கு சக்கர நாற்காலியினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 33 பயனாளிகளுக்கு ரூ.37,500 மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவிதொகை, மாற்றுத்திறனாளி உதவிதொகைகளையும், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.20,000 மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகையினையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகளின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,000 மதிப்பீட்டிலும், மாவட்ட காசநோய் மையம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.5,000 மதிப்பீட்டிலும் ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.30,000 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்களையும், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மீனவர் நல வாரியம் நிவாரண திட்டத்தின் கீழ் 2 நபர்களுக்கு தலா ரூ.2,00,000 வீதம் என ரூ.4,00,000 மதிப்பிலான விபத்து நிவாரணத்திற்கான ஆணையினையும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.8,68,798 மதிப்பீட்டில் பவர் டில்லர்,நெல் மற்றும் மிளகாய் அரவை இயந்திரம், சூரிய சக்தி மின் மோட்டார் போன்றவைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,30,349 மதிப்பீட்டில் மின்கல தெளிப்பான், உளுந்து விதை, தார்பாய், ரோட்டர்வேட்டர் போன்றவைகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ.52,000 மதிப்பிலான மிளகாய் மற்றும் சாமந்தி குழித்தட்டு நாற்றுகள்,விதைகள், இடுபொருட்களையும், தாட்கோ சார்பில் 7 நபர்களுக்கு ரூ.15,90,000 மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய டிராக்டர் நலவாரிய அடையாள அட்டைகளையும், மாவட்ட தொழில் மையம் சார்பில் 4 நபர்களுக்கு ரூ.59,00,000 மதிப்பிலான மரச்சாமான்கள் தயாரிப்பு, ஆயில் டேங்கர், ஆடியோ ஒர்க்ஸ் மற்றும் வீடியோகிராபி என மொத்தம் 81 பயனாளிகளுக்கு ரூ.90 இலட்சத்து 89 ஆயிரத்து 347 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் சுகாதரத்துறை, வட்டாசியர்கள், துணை ஆட்சியர்கள், கல்வித்துறை, வருவாய்த்;துறை, காவல்துறையினர் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

