• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் – குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

policeseithitv by policeseithitv
January 26, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் – குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 74வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா முன்னிலை வகித்தார். உதவி ஆணையர் சந்திரமோகன் வரவேற்புரையாற்றினார். மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிப் பணிக்கு உறுதுணையாக இருந்த தனியார் நிறுவனங்களுக்கு பாராட்டு நினைவு பரிசு, 25 ஆண்டுகள் மாசற்ற முறையில் பணியாற்றிய பணியாளர்கள் 2022-23ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய நிரந்தர மற்றும் நகர்புற வாழ்வாதார மையப்பணியாளர்கள் தமிழக அரசின் கல்வித்துறை சார்பில் மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் பங்கேற்று பரிசு பெற்ற மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவருக்கு நினைவு பரிசு வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். பின்னர் குடியரசு தினத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் பொறுப்பேற்று 11 மாதங்கள் ஆகின்றன. இரண்டு பக்கமும் சில சமயம் கத்தி போன்று கூர்மையாக இருக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் குத்து. ஆனால் ஆணையர் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னோடியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். ஒவ்வொரு சாலை பகுதியும் 3 வருடம், 5 வருடம் என சில விதிமுறைகளின்படி உள்ளன. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமையான பல திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும் என்ற கடமையில் நாங்கள் இருக்கிறோம். மாநகரில் தற்போது 5 லட்சத்திற்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். 2008ல் துணை முதலமைச்சராக இருந்து தற்போது முதலமைச்சராக பணியாற்றும் ஸ்டாலின் கொண்டு வந்த பக்கிள் ஓடை திட்டம் மூலம் கடலுக்கு மழை நீர், கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதையும் சுத்திகரிக்கப்பட்டு செடி வளர்ப்பதற்கென்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் 152 பூங்காக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 40 பூங்காக்கள் தான் இருக்கின்றன. பலர் பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதை படிப்படியாக மீட்போம். முத்துநகர் கடற்கரையில் ரோச் பூங்கா என பல இடங்கள் அழகுபடுத்தப்பட்டு, தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள பலரும் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திடும் வகையில் நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவைகள் மூலம் பலனடைந்து வருகின்றனர். வி.இ.ரோடு, ஜெயராஜ் ரோடு பகுதிகளில் பொதுமக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு நல்லதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். வளர்ந்து வரும் மாநகர பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் மாநகர வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும், இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின் சூசை, ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், ஜாண்;சிராணி, ஜெயசீலி, ரிக்டா, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் எடின்டா, கற்பக கனி, சந்திரபோஸ், கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலெட்சுமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மும்தாஜ், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, காந்திமதி, அதிகாரிகள் ராமசந்திரன், சேகர், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

திட்டம் செயற்பொறியாளர் ரெங்கநாதன் நன்றியுரையாற்றினார்.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தேசிய கொடியை ஏற்றினார்

Next Post

மாப்பிள்ளையூரணி கிராம மக்களுக்கு பட்டா, புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்ட பணிகள் எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ மூலம் விரைவில் கிடைக்கப்பெறும் : கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல்!!

Next Post
மாப்பிள்ளையூரணி கிராம மக்களுக்கு பட்டா, புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்ட பணிகள் எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ மூலம் விரைவில் கிடைக்கப்பெறும் : கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல்!!

மாப்பிள்ளையூரணி கிராம மக்களுக்கு பட்டா, புதிய கட்டிடங்கள், பல்வேறு திட்ட பணிகள் எம்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ மூலம் விரைவில் கிடைக்கப்பெறும் : கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தகவல்!!

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In