நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ்; நடைபெற்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் மறுகட்டுமானப் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் ஜனவரி 26
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியின் கீழ் மகிழி கிராமத்தில் வெள்ளையாற்றின் குறுக்கே புதிய கடைமடை இயக்கு அணை மற்றும் அடப்பாற்றின் குறுக்கே கள்ளிமேடு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கடைமடை இயக்கு அணை உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் மறுகட்டுமானப் பணிகளை மாநில திட்டக்குழு துணைத்தலைவர் டாக்டர் ஜெ.ஜெயரஞ்சன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.நீர்வளத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன் காவிரி வடி நிலத்தில் உள்ள வெள்ளையாற்றின் குறுக்கே புதிய கடைமடை இயக்கு அணை அமைக்கும் பணியால் மகிழி, சோழவித்தியாபுரம், கருங்கண்ணி, பாலக்குறிச்சி, கலத்திடல்கரை, மடப்புரம், முப்பத்தி கோட்டகம், வடக்குப்பனையூர், தெற்குப்பனையூர், மேலவாழக்கரை, ஏர்வைக்காடு மற்றும் நாட்டிருப்பு ஆகிய கிராமங்கள் பயன் பெறும்.
மேலும் இந்த புதிய நீரொழுங்கி மூலம் வீணாக கடலில் சென்று கலக்கும் மழை நீரிலிருந்து சுமார் 42.00 மில்லியன் கன அடி அளவுள்ள மழை நீரை சேமிக்கலாம். இதனால் பயன்பெறும் அருகில் உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும், மேலும் இந்நீரொழுங்கியால் கடல் நீர் உட்புகாமல் தடுக்கப்பட்டு, நிலத்தடி நீரின் கடினத்தன்மை குறைந்து மக்களுக்கு குடிநீருக்கும், நிலங்களுக்கு பாசனம் செய்வதற்கும் ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை செயற்பொறியாளர்கள் ம.கோ.ராஜேந்திரன், லதாமகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர்கள் சிதம்பரநாதன், கோ.கமலகண்ணன், மதியழகன், சங்கர், பார்த்திபன், உதவி பொறியாளர்கள் தங்கமுத்து, சாக்ரடீஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

