வேதாரணியத்தில் 74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாட்டம்.
வேதாரணியம் ஜனவரி 26
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் ஜெயசீலன் தேசியக்கொடி யை ஏற்றி வைத்தார் .உடன் கோட்டாட்சியரின் நேரடி உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். வேதாரணியம் காவல் நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன் துணை ஆய்வாளர் இங்கர்சால் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.முன்னதாக நடந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை துணை கண்காணிப்பாளர் முருகவேல் ஏற்றுக்கொண்டார்.வேதாரணியம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா,நகர மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி,நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள்
கலந்து கொண்டனர். நகராட்சி சார்பில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில்
வேதாரணியம் ராஜாஜி பூங்காவில் தேசிய கொடியை நகராட்சி ஆணையர் ஹேமலதா ஏற்றி வைத்தார். உடன் நகர்மன்றத் தலைவர் மா.மீ புகழேந்தி,துணைத் தலைவர் மங்களநாயகி,நகர மன்ற உறுப்பினர்கள்,நகராட்சி ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தேசியக்கொடியை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கமலா அன்பழகன் ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜு, பாஸ்கரன்,
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

