நாகப்பட்டினம் ஜனவரி 25
நாகப்பட்டினம் மாவட்டம் இ.ஜி.எஸ்.பிள்ளை பொறியியல் கல்லூரியில் 13-ஆவது தேசிய வாக்காளர் தின விழா கொண்டாடப்படுவதை தொடர்ந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதி மொழி எடுத்தல், தேசிய வாக்காளர் தினம் குறித்து பாட்டுப்போட்டி, கட்டுரை போட்டி, தேர்தல் குறித்த சுலோகன் எழுதுதல், ஓவியப் போட்டி, சுவரொட்டி தயாரிக்கும் போட்டி, நடனம், வினாடி வினா போன்ற ஏழு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள், மூத்த வாக்காளர்கள் மற்றும் சிறப்பாக பண்புரிந்த வாக்குச்சாவடி அலுவலர்களை கௌரவித்தல், மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வழங்கினார். நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் உடன் உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:தேசிய வாக்காளர் தின பேரணியில் நாகப்பட்டினம் வட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் 1200க்கு மேல் கலந்து கொண்டனர். இதனை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர் மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் ஆகியோர் முன்னின்று வழிநடத்தி சென்றனர். பேரணி நாகப்பட்டினம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கி இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறைவுற்றது. மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடையே வாக்காளர் தின விழிப்புணர்வு தொடர்பான உறுதிமொழி எடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் அவர்களால் மூத்த வாக்காளர்களுக்கு சால்வை அணிவித்தும், இளைய வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், தேசிய வாக்காளர் தினம் குறித்தும், 18 வயது நிரம்பியவர்களை அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்றும் இளம் வாக்காளர் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
பின்னர் தேசிய வாக்காளர் தினம் குறித்து சிறப்பு கலை நிகழச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் மாவட்ட அளவில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக காணொலி காட்சி வெளியிடப்பட்டு, தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

பின்னர்; ஏற்கனவே அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பள்ளி கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் வட்டாட்சியர்கள், மற்றும் தேர்தல் கல்விக்குழுக்கள் மூலம் சுவரொட்டி வரைதல், பாட்டுப்போட்டி, (ம) மகளி;ர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்பெற்ற ரங்கோலி போட்டிகளில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றுகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக “மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் எனவும் உளமாற உறுதி கூறுகிறேன் என்ற உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில்; அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சு.ராமன், முதன்மைகல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி, தேர்தல் வட்டாட்சியர் சாந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக நாகை
மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

