நாகப்பட்டினம் ஜனவரி 21
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு மற்றும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலக கட்டிட கட்டுமானப் பணிகளையும், நாலுவேதபதி; ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி செயலக கட்டிட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் கருப்பம்புலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிட கட்டுமானப் பணிகளையும், வெள்ளிக்கிடங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிட கட்டுமனப் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருதூர் தெற்கு ஊராட்சியில் ரூ.42.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கான ஆலோசனைகளை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் ரூ.26 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள ஊராட்சி செயலக கட்டிடத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அடிக்கல் நாட்டினார்.


அதனைத் தொடர்ந்து வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தெற்கு வீதியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற கோலப்போட்டிகளை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ம.பிரதிவிராஜ், ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் தஎன்.பசுபதி, வேதாரண்யம் மற்றும் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி
டிவிக்காக
நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

