வேதாரண்யம் ஜனவரி 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கில் வேதாரணியம் நகராட்சியின் சார்பில் தமிழர் திருநாள் கொண்டாட்டம்
“நம்ம ஊரு திருவிழா ” பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்
நடைபெற்றது.
முன்னதாக 20.01.2023 வெள்ளிக்கிழமை காலை வேதாரணியம் ஒன்றிய அளவிலான நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்ட போட்டி நடைபெற்றது .
அதனைத் தொடர்ந்து 21.01.2023 சனிக்கிழமை காலையில் நகராட்சி அளவிலான அனைத்து மகளிர் பங்குபெறும் கோலப்போட்டி நடைபெற்றது .
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் கோலப் போட்டியினை நேரில் வருகை தந்து பார்வையிட்டு தனது வாழ்த்துக்களை கூறினார். அதனைத் தொடர்ந்து நகராட்சி அளவிலான மகளிர் குழுக்களில் இருந்து தேர்வு செய்து அனுப்பப்பட்ட போட்டியாளர்களின் பாட்டு போட்டி நடைபெற்றது. காலை 11.30
வேதாரணியம் நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பங்கு பெறும் இசை நாற்காலி போட்டியும்,கயிறு இழுக்கும் போட்டியும் நடைபெற்றது.
பகல் 12.30 மணியளவில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பிற்பகல் 3.30
மணியளவில்
K.M.P.கேசவன் குழுவினரின் நாதசுர இன்னிசை நடைபெற்றது .
மாலை நாலு மணிக்கு
நகராட்சி அளவிலான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவ மாணவியர் பங்குபெறும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
மாலை 6.30
மணிக்கு விழா தொடங்கியது.
நகர் மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி விழாவுக்கு தலைமை தாங்கினார்.
நகராட்சி ஆணையர் வி ஹேமலதா வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என் கௌதமன் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் மதிவதனி
“அறமும் தமிழர் வாழ்வும் “என்ற தலைப்பில் உரைவீச்சு நடத்தினார் .நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்
“வேதாரணியம் நகராட்சியின் வரவேற்கும் குரல் ” 9090545436 என்ற எண்ணிற்கான சேவையை துவக்கி வைத்தார். பின்னர் பள்ளி மாணவ மாணவியரின் நாட்டுப்புற நடன போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் அனைத்து போட்டிகளிலும் வென்றவர்களுக்கு பரிசளிப்பும் சான்றும் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்,தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என் கௌதமன் ஆகியோர் வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் எஸ் எஸ் தென்னரசு,
நாகை மாவட்ட வர்த்த சங்கத் தலைவர் எஸ் வேதநாயகம், A.வேதரெத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியாக நகர்மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி நன்றி உரையாற்றினார். அனைத்து நிகழ்ச்சிகளையும் கவிஞர் புயல் சு.குமார் தொகுத்து வழங்கினார்.
தலைமை ஆசிரியர்கள் எம் மோகனசுந்தரம்,
வீ பொதுவுடைச் செல்வன் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்துஅளித்தார்கள்.இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

