நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் வழங்கினார்கள்.
நாகப்பட்டினம் ஜனவரி 20
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது :
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டுவரும் கிராம பஞ்சாயத்துகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தினைச் செயல்படுத்தி அக்கிராமப் பஞ்சாயத்துகளைத் தன்னிறைவு பெற்ற கிராமங்களாகவும் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி பெற்ற கிராமங்களாகவும் மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். நடப்பு ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டம் 51 கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மைப் பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆகிய துறைகளின் திட்டங்களைத் தேர்வு செய்யப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில் செயல்படுத்துவது மட்டுமல்லாது வேளாண்மை – உழவர் நலத்துறையின் தொடர்புடைய துறைகளான வருவாய், ஊராட்சி, கால்நடை, கூட்டுறவு, பால்வளம் போன்ற துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் கிராம ஊராட்சிகளில் தலா ஒரு பண்ணை குடும்பத்திற்கு 2 நெட்டை தென்னங்கன்றுகள் வீதம் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு 100 சத மானிய விலையிலும்;, விசைத் தெளிப்பான்கள் தலா 9-10 எண்கள் வீதம்; ரூ.3000 மானிய விலையிலும் மற்றும் திரவ உயிர்உரம் விநியோகம் 30 -35 எக்டேர் கிராம ஊராட்சி (ரூ.300 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் 80 சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சிறு, குறு மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் வேளாண் விவசாய பயனாளிகளுக்கு இடுபொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.இவ்விழாவில் திருமருகல் ஒன்றியத் தலைவர் இராதாகிருஷ்ணன் வேளாண்மை-உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், ஆர்.டி.எஸ்.சரவணன் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

