நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் ஜனவரி 20
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர், ம.பிரதிவிராஜ் உடன் உள்ளார்.
கீழையூர் ஊராட்சி ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சி திருமணங்குடி பகுதியில் 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.69 இலட்சம் மதிப்பீட்டில் தனி நபர் குடிநீர் குழாய் இணைப்பு அமைக்கும் பணி கீழையூர் ஊராட்சி பகுதியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டும் கட்டுமானப்பணிகள் நடைபெறுவதையும், ஈசனூர் ஊராட்சி ஈசனூர் கட்டளை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய ஃ நடுநிலைப் பள்ளிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடம் கட்டுதல் திட்டத்தின் கீழ் ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் மற்றும் மேல ஈசனூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.91 இலட்சம் மதிப்பீட்டில் பெண்கள் கழிப்பறை கட்டிட கட்டுமானப்பணிகள் நடைபெறுவதையும், கீழ ஈசனூர் தாமரைத்திடல் சாலையை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.63 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், ஈசனூர் ஊராட்சியில் இயற்கை முறையில் நெற்பயிர் சாகுபடி செய்யப்படுவதையும், தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவு கட்டட கட்டுமானப்பணிகள் நடைபெறுவதையும், அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், வேளாங்கண்ணி பேரூராட்சி சுனாமி குடியிருப்பு செட்டித் தெருவில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் கல்வி கற்பிக்கும் பணி நடைபெறுவதையும், மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதியினையும் செயல்படுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, ஈசனூர் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினையும், ஈசனூர் கிராமத்தில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் இடுபொருட்கள் வழங்கும் விழாவில் தென்னங்கன்று, வேளாண் கருவிகள், உளுந்து, பயறு, மற்றும் பாரம்பரிய நெல் விதை விநியோகத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பாரம்பரிய நெல் விதைகளையும், ஜிங்க் சல்பேட் போன்ற இடுபொருட்களை விவசாயிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வழங்கினார்.


இந்த ஆய்வின்போது கீழையூர் அட்மா வட்டாரக்குழுத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, கீழையூர் மற்றும் தலைஞாயிறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

