நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் உடன் உள்ளார்.
நாகப்பட்டினம் ஜனவரி 20
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
திருமருகல் ஊராட்சி ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சியில் ரூ.17.64 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தினையும், ரூ.11.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும், கோட்டூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடை கட்டடத்தினையும், பில்லாளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தினையும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் பொதுமக்களின் நலனை கருதி மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மக்களைத்தேடி மருத்துவம், இல்லம்தேடி கல்வி, போன்ற பல்வேறு நல்ல பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். அதனைத்தொடர்ந்து நம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தை தனி தாலுக்காவாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், ஏனங்குடி பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையினை மாண்புமிகு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் தெரிவித்தார். அதனைதொடர்ந்து கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியம் கூரத்தாங்குடி கிராம ஊராட்சியில் பணியிடைக்காலமான ஊராட்சி செயலாளர் ஏ.மாசிலாமணி என்பவரின் மனைவி ரா.ராஜேஸ்வரி என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணிக்கு பணி நியமன ஆணையினையும், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்ற துறை மற்றும் முன்னாள் படை வீரர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் திருமருகல் ஒன்றியத் தலைவர் இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) ராஜாராம், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் கா.ப.அருளரசு, வேளாண்மை-உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ், திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், ஆர்.டி.எஸ்.சரவணன், ஆரூர் மணிவண்ணன், ஆதலையூர்,கோட்டூர்,பில்லாளி ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

