வேதாரணியத்தில் மினி மராத்தான் ஓட்டப்போட்டி நடைபெற்றது.
வேதாரணியம் ஜனவரி 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியத்தில் வேதாரணியம் ஒன்றிய அளவிலான நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மை. ஜெயராஜ பௌலின் தலைமையில் நடைபெற்றது .
காவல்துறை கண்காணிப்பாளர் கே.முருகவேல் மாரத்தான் ஓட்டப் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் வேதாரணியம் நகர் மன்ற தலைவர் மா.மீ.புகழேந்தி,
நகர் மன்ற துணைத் தலைவர் மங்களநாயகி,
நகராட்சி ஆணையர் ஹேமலதா,கோடிக்கரை வனத்துறை அலுவலர் அயூப்கான் ,வேதாரணியம் காவல்துறை ஆய்வாளர் குணசேகரன், வேதாரணியம் நகர மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள்,ஆசிரியர்கள், ஆசிரியைகள்,பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முன்னதாக நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.



இந்த மாரத்தான் ஓட்டப் போட்டியில் ஆண்கள்
1070 பேரும்
பெண்கள் 600 பேரும் கலந்து கொண்டனர்.முதலில் ஆண்களுக்கான ஓட்டப்போட்டி நடைபெற்றது.இதன் பின் பெண்களுக்கான ஓட்டப்போட்டி நடைபெற்றது.
இந்த ஓட்டப் போட்டியானது ஆண்களுக்கு 8 கீ.மீ தூரமும்
பெண்களுக்கு 4
கீ.மீ தூரமும் நடைபெற்றது.போட்டியில் முதலில் வந்த ஆண்கள் 13 பேரும் பெண்கள் 13 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆண்கள் மாரத்தான் ஓட்டப் போட்டியில் முதலில் விக்னேஷ் அண்டர் காடு, இரண்டாம் இடத்தில் யோகேஷ் குரவப்புலம்,மூன்றாம் இடத்தில் கோவிந்தராஜ் அகஸ்தியம்பள்ளி வந்தனர்.பெண்கள் பிரிவில் முதல் இடத்தில் கரும்பாயி செம்போடை,இரண்டாம் இடத்தில் நந்தினி மறைஞாயநல்லூர் ,மூன்றாம் இடத்தில் எழிலரசி கத்தரிப்பலம் வந்தனர். முதல் பரிசு ரூபாய் 5000, இரண்டாம் பரிசு ரூபாய் 4000, மூன்றாம் பரிசு ரூபாய் 3000
ஆறுதல் பரிசாக தலா பத்து பேருக்கும் ரூபாய் ஆயிரம்
அளிக்கப்படுகிறது. மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் அளிக்கப்படும் என்று வேதாரணியம் நகர் மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி கூறினார்.இந்த மாரத்தான் ஓட்ட போட்டிக்கு மருத்துவத் துறையினர்,மின்சாரத் துறையினர்,நகராட்சி துறையினர், வனத்துறையினர், காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக கவிஞர் புயல் சு.குமார்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக தலைமையாசிரியர்கள் எம். மோகனசுந்தரம்,
வீ. பொது உடைச் செல்வன் செயல்பட்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

