தூத்துக்குடி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி காந்திநகர் பகுதி மக்கள் சாலையே இல்லாத தங்களது பகுதிக்கு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து ஊராட்சி மன்ற நிதியிலிருந்து பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவருமான தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சரவணக்குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தமிழ்செல்வி, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், திமுக கிளைசெயலாளர் மாரிமுத்து, மற்றும் சங்கரன், ராமசந்திரன், கருப்பசாமி, பழனி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

