வேதாரணியம் ஜனவரி 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரத்தை அடுத்த கோடியக்கரையில்
திருச்சி வன மண்டலம் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா ஆகியோர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரகம் கோடியக்கரை சரணாலய பகுதிகளில் அதிதீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு பணி மேற்கொண்டுவரப்படுகிறது.
இது ஒரு சுற்றுலா தலமாகும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் வானங்களுடன் வந்து குரங்குகளை தொந்தரவு செய்வது, அதற்கு தின்பண்டங்கள் போடுவது தடைசெய்யப்பட்டுள்ளது அது குறித்து பதாதைகளும் வைக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி குரங்குகளுக்கு தின் பண்டங்கள் அளித்தாலோ விலங்குகளுக்கு தொந்தரவுகள் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டாலோ இந்திய வனஉயிரின பாதுகாப்புச் சட்டம் 1972 மற்றும் திருத்தபட்ட 2022 வனஉயிரினப் பாதுகாப்பு சட்டங்களின்படி வாகனங்களை பறிமுதல் செய்து கைது செய்து வழக்குபதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்த நேரிடும் மேலும் இச்சட்டத்தில் ஒரு லட்சம் அபராதம் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க தக்க குற்றமாகும். ஆகவே சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை இயற்கையோடு சேர்ந்து வாழவழிவகை செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அதேபோன்று சரணாலய சாலைகளில் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வாகனத்தினை இயக்குமாறும், பிளாஸ்டிக் பொருட்களை சாலை ஓரங்களில் எரிந்து செல்லவேண்டாம் எனவும் வனத் துறையின் சார்பாக வேண்டிக்கொள்கிறோம் என
வனச்சரக அலுவலர் பா.அயூப்கான்
தெரிவித்துள்ளார்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

