நாகப்பட்டினம் மாவட்டம் 2022-2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு சேர்க்கை மற்றும் இணையதளம் வழியாக பதிவு செய்ய கடைசி தேதி 23.1.2023 வரை நீட்டிப்பு
பள்ளி,கல்லூரி மாணவ,மாணவியர்கள்,பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் கலந்துகொள்வதற்கு இணையதளம் மூலம் பதிவு செய்ய நாகப்பட்டினம்,மாவட்ட ஆட்சித் தலைவர்
டாக்டர். அ. அருண் தம்புராஜ், தகவல்.
நாகப்பட்டினம் ஜனவரி 18
2022-2023ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் புதிதாக கிரிக்கெட் விளையாட்டு பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேர்க்கப்பட்டு நடத்தப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் மூலம் பதிவு செய்ய கடைசிதேதி 23.1.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மற்ற விளையாட்டுப் போட்டிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் நடைபெறும். கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி நடத்தப்படும் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் (ஆடவர் மற்றும் மகளிர்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்; விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள இணையதளம் மூலம் 23.1.2023-க்குள் பதிவு செய்யுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

