நாசரேத், ஜன.18:
நாகன்னியாபுரம் வயல் பகுதியிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் மெயின் ரோட்டிற்கு தன்னுடைய தோலிலேயே மரித்த நபரை தூக்கி சுமந்து வந்து
ஆம்புலன்ஸில் ஏற்ற உதவி செய் துள்ளார்.
இவருடைய மனித நேயம் பாராட்டத்தக்கது.
ஆறுமுகநேரி அருகிலுள்ள கீழநவ்வலடியைச் சேர்ந்த சித்திரைவேலுவின் மனைவி அம்மாள் தங்கம் (67). கடந்த 3 நாட்களாக மாரடைப்பால் அவதிப்பட்டு வந்த இவர்,புல் அறுக்க நாக கன்னியாபுரம் பகுதியிலுள்ள வயல்வெளிக்கு சென்றார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கே யே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குரும்பூர் போலீ சார் காளிமுத்து என்பவர் மூதாட்டியின் உடலை தனது தோளில் சுமந்த படியே சாலைக்கு கொண்டு வந்து சேர்ந்தார்.இவரது மனித நேயத்தை பாராட்டி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் சார்பாக மோகன் சி. லாசரஸ் வாழ்த்தி வெகுமதி வழங்கினார்.

