நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 18
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் நாகை சங்கமம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்பராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆகியோர் உடன் கலந்துகொண்டனர்.
நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் தமிழர் திருநாள் சிறப்பு கொண்டாட்ட நிகழ்வாக, நாகை சங்கமம் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணி வரை பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்வேறு விழிப்புணர்வு கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலை சங்கம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அதனை தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில் இன்றைய சூழலில் வாழ்க்கை என்பது கொண்டாட்டமா? திண்டாட்டமா? என்ற தலைப்பில் மாபெரும் சிந்தனை நகைச்சுவை பட்டிமன்றம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், தெரிவித்தார்.
முன்னதாக காவல்துறை, சமுக நலத்துறை, குழந்தை வளர்ச்சி திட்டம், மகளிர் திட்டம், ஊரக புத்தாக்கத்திட்டம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத்துறை மற்றும் இதர துறையினர் அவர்களது அரசு நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு குறித்து பொதுமக்களுக்கு அறிந்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், மாசுக்கட்டுபாட்டு வாரியம் வாயிலாக நெகழி ஒழிப்பு குறித்தும் மீண்டும் மஞ்சப்பை திட்டம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கண்கவர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும்; அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

