வேதாரண்யத்தில் ப.ஜீவானந்தம் நினைவு நாள் நிகழ்ச்சி
வேதாரண்யம்,ஜன.18
நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் அமைப்பின் நிறுவனர், தமிழறிஞர் ப.ஜீவானந்தம் நினைவு நாளையொட்டி புகழஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜீவாவின் படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் புயல் குமார் தலைமை வகித்தார்.மாவட்டச் செயலாளர் தென்னடார் அம்பிகாபதி,கிளைத் தலைவர் தங்க.குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில்,பெருமன்ற கிளை துணைச் செயலாளர் செந்தில்நாதன்,பொருளாளர் கோவி.ராசேந்திரன்,நல்லாசிரியர் விருது பெற்ற வீ.வைரக்கண்ணு,தஞ்சை ராமசுப்பிரமணியன், ஜி.கே.பாலா, எஸ்.ராமசாமி,சி.ராஜாஜி,ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
போலீஸ் செய்தி டிவிக்காக
நாகைமாவட்ட
செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

