• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு எனப்பெயர் கிடைக்க 76 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கநாடார் தியாகத்தை மதிப்போம் பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்

policeseithitv by policeseithitv
January 16, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு எனப்பெயர் கிடைக்க 76 நாள் உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கநாடார் தியாகத்தை மதிப்போம் பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி தமிழர்திருநாளான பொங்கல் திருநாளையொட்டி 30வது வட்ட திமுக மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10வது தெருவில் அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமையில் கவுன்சிலர் அதிஷ்டமணி, நிர்வாகிகள் ராஜ்மோகன், கார்த்திகேயன், அந்தோணிராஜ், அன்பழகன், நாராயணராஜ், சுப்பிரமணியன், கணேசன், சபேசன், சந்திரசேகர், தங்ககுமார், சீனிவாசன், செல்வராஜ், சின்ராஜ், அன்னராஜன், டேனியல், ஜெயராமன், ரவிக்குமார், சத்யநாராயணன், ராஜ்நாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேக் உமர் வரவேற்புரையாற்றினார்.

 

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி அமைச்சர் பேசுகையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு திருவிழா உண்டு ஜாதி, மதம், கடந்து தமிழர்கள் கொண்டாடும் சமத்துவ பொங்கல் இந்த பொங்கல் விழாவையொட்டி கடந்த காலங்களில் பொருட்கள் வேண்டாம் பணமாக கொடுக்க வேண்டும் என்று பொதுமக்களாகிய நீங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஸ்டாலின் அரிசி சர்க்கரை கரும்பு ஆகியவற்றுடன் ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரிய மாநிலம் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி என பல முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதை ஒன்றிய அரசே கூறியுள்ளது. கல்வி வேலைவாய்ப்பு என பல அடக்கம் கொள்கையே இல்லாமல் பலர் கட்சி தலைவர் என்று கூறிக்கொண்டு பொய்யான தகவல்களை கூறிகொண்டு வருகின்றனர். அதிமுகவில் இரண்டு பேரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக உள்ளனர். தமிழ் மொழி கலாச்சாரம் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்துள்ள காரணத்தால் ஒன்றிய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை குறைத்து கொண்டே வருகிறது. நம்முடைய முதலமைச்சர் நிர்வாகத்திறமையால் அதையும் சமாளித்து பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர், ஆகியோரின் லட்சிய வழியில் முதலமைச்சர் பணியாற்றி கொண்டிருக்கிறார். தமிழ்நாடு என்ற பிரச்சனையை சிலர் கிளப்பினார்கள். தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்கநாடார் தியாகத்தை நாம் போற்றுவோம் வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் மாநில பிரச்சனையை உருவாக்கியவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் இது எங்கள் நாடு என்று ஓட்டு மொத்தமாக தனது எதிர்ப்பு குரலை ஒலிக்க செய்தனர். தேர்தல் நேரத்தில் மட்டும் வேசம் போடுவதற்கும் கோஷம் போடுவதற்கும் சிலர் வருவார்கள் திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்யும் கட்சி இந்த பகுதியில் உள்ள பூங்காவை மழைநீர் தேங்காதவாறு சீரமைத்துள்ளோம் இந்த பகுதி முழுவதும் விரைவில் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று பேசினார்.

விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்;ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன், வட்டச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலு, மற்றும் கருணா, அல்பட், கிளிப்ராஜன், உள்பட வார்டு பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வட்டச்செயலாளர் செந்தில்குமார் நன்றியுரை கூறினார்.

Previous Post

மாப்பிள்ளையூரணி பொதுமக்கள், மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு “மக்கள் பஞ். தலைவர் சரவணகுமார்” நேரில் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து அசத்தல்!!!!

Next Post

மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

Next Post
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசுத்தொகையை பஞ். தலைவர் சரவணக்குமார் வழங்கினார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In