2021-தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நேற்று மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் , ஊர்க்காவல் படையினர் இணைந்து மாவட்ட காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது .
பொதுமக்கள் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் வாக்களிக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இந்த சாலை அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் தகார்த்திகா. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்நிகழ்வில் சார் ஆட்சியர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தருமபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர் .


