• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. 

policeseithitv by policeseithitv
January 11, 2023
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் 11

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் பாலர் சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதனை தொடர்ந்து நம் மாநில அரசு டிசம்பர் 2021 வெளியிட்ட தமிழ்நாடு மாநில குழந்தைகள் கொள்கை 2021-ல் பங்கேற்பு எனும் பகுதியில் ஒவ்வொரு கிராம ஊராட்சியில் ஆண்டுக்கு 4 முறை பாலர் சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலர் சபை என்பது 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கான பிரத்தியோக சபை, பாலர் சபையானது ஒவ்வொரு கிராம ஊராட்சிகளிலும் வசிக்கும் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளை உறுப்பினராக கொண்டது. கிராம ஊராட்சிகள் உள்ள அனைத்து பள்ளிகளின் மேம்பாடு, ஒவ்வொரு பகுதியில் உள்ள குழந்தைகளின் தேவைகள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடி, விவாதித்து அதற்கான தீர்வை நோக்கிய பயணத்தின் தொடக்கப் புள்ளியாக இந்த பாலர் சபை அமையும்.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், வழிகாட்டு நெறிமுறைகளில், ஒவ்வொரு கிராம ஊராட்சியில் பாலர் சபா கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில் குழந்தைகளுக்கான பிரத்தியோக பாலர் சபை கூட்டம் நடத்துவதற்கான பணிகள், கிராம ஊராட்சி தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி கடந்த செப்டம்பர் 2021 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு பள்ளியிலும் ஜனநாயக முறையில், தேர்தல் நடத்தப்பட்டு, மாணவிகள் மற்றும் மாணவர்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து வார்டு அளவிலான வார்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நமது அரசினர் மேல்நிலைப் பள்ளியில் முதல் பாலர் சபை கூட்டம் நடைபெறுகிறது.

மேலும், மாணவ, மாணவிகள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக இருக்க வேண்டும். புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற அனைத்து தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள்களை பயன்படுத்தக்கூடாது. நாடு வளர்ச்சி அடைவதில் முழு பங்கு மாணவ மாணவிகளிடம் தான் உள்ளது அதனால் இந்த வயதில் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து நன்றாக படித்து வாழக்கையில் முன்னேற வேண்டும்.

மாணவர்கள் கைப்பேசிகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்களின் குடும்பத்தை பாதிக்கும். இவை அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

மேலும், இந்த பாலர் சபை கூட்டத்தில் மாணவ,மாணவிகள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். இவற்றில் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.எஸ்.சிவராசு, பள்ளி தலைமையாசிரியர் எம்.பி. மகேஸ்வரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக

நாகை மாவட்ட செய்தியாளர்

எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

6 வட்டாரங்களைச் சேர்ந்த 52 மாணவர்களுக்கு ஒருநாள் சுற்றுலாவிற்கு நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In