நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் ஜனவரி 11
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அரசு பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 10.01.20123, 11.01.2023 ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற்றது. ஆட்சிமொழிப் பயிலரங்கினைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில்; மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையுரை ஆற்றினார். அவருடைய உரையில் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக செயல்படுத்திடுவதற்கு அரசுத் துறைகளின் அலுவலர், பணியாளர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் நடத்தப்பெறுகின்றன.
மேலும், இப்பயிலரங்கில் “ஆட்சிமொழி வரலாறும் சட்டமும் மொழிப் பெயர்ப்பும் கலைச்சொல்லாக்கமும் ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் மொழிபெயர்ச்சி கணினிப்பயிற்சி ஆட்சிமொழித் திட்ட அரசாணைகளும் செயலாக்கமும் தமிழில் குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம் செய்தல் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்திலுள்ள தன்னாட்சி நிறுவனம் வாரியம் கழகம் அரசுத் துறை அலுவலகங்களிலிருந்து உதவியாளர் இளநிலை உதவியாளர் தட்டச்சர் நிலையில் கலந்து கொண்டனர்.

தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் உலகளவில் தமிழுக்கும், தமிழருக்கும் உள்ள மாண்புகள் குறித்தும், அரசுப் பணியாளர்கள் அரசின் ஆணைப்படி குறிப்புகள், வரைவுகள் மற்றும் ஆணைகளில் தமிழைப் பிழையின்றி பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். பயிற்சி பெற்ற பணியாளர்கள் தாங்கள் பெற்ற கருத்துகளை தங்கள் அலுவலகத்தைச் சார்ந்தவர்களுக்கும் எடுத்துரைக்குமாறு தெரிவித்து, இப்பயிலரங்கில் அறிந்து கொண்ட செய்திகள் தொடர்பாக வினா-விடை நடத்தி சிறப்பாக மறுமொழி அளித்தவர்களுக்கு எழுதுகோல்கள் மற்றும் இப்பயிலரங்கம் கருத்தரங்கத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர்.இரா.அன்பரசி வரவேற்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்கக உதவி இயக்குநர் (நிர்வாகம்) பொ.பாரதி, நெய்வேலி ஜவகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வெ.தி. சந்திரசேகர், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.இராசா, மயிலாடுதுறை , நச்சினார்க்குடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் விழிகள் சி. ராஜ்குமார், நாகப்பட்டினம், திருப்பூண்டி வடக்கு, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆறு.துரைக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) சு.இராமன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மா.மல்லிகா, மாவட்டப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் க. சங்கர், அ.து.ம. மகளிர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் தெ. வாசுகி, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் உதவியாளர் ஆ. லியாகத் அலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

